பேச்சில் சர்க்கரை
நம்மைநாடி வந்தோரைநாம் மதித்திடவேண்டும்
நாம்நாடிச் செல்வோரும் உதவிடவேண்டும்
கல்வியில் சிறந்தோராயினும் கடுந்திட வேண்டாம்
கற்றோன் என்போன் கடுஞ்சொல் தவிர்ப்போனே!
நன்றிமறவாமை நாம் சேர்க்கும் புண்ணியமே
நம்மைவந்து ஒருநாள் காத்திடுமே
கூடிக்கும்மி அடித்திட வேண்டும்
நம்புபவரைக் என்றும் கும்மி அடித்திடவேண்டாம்!.
உதவிசெய்வதைக் கற்றுக் கொடுத்திடுவார்
உதவியென்றபோது ஓதுங்கி நின்றிடுவார்
பேச்சில் சர்க்கரையாய் இருந்திடுவார்
பேசும்போது புன்னகையும் பூத்திடுவார்
சொல்லும் செயலும் இணைந்திடவேண்டும்
சொர்க்கத்தை அதுவே காட்டிநிற்கும்
பாகக்காயாய் கசந்திட்ட போதும்
பாதகமில்லாமல் நடந்திட வேண்டுமே!
-சிகுரு
No comments:
Post a Comment