உழைப்பு
உள்ளம் உருகும் உழைப்பு
உயர்வைத் தரும் உழைப்பு
கள்ளம் இல்லா உழைப்பு
காற்றுப் போன்ற உழைப்பு!
உண்மை நிறைந்த உழைப்பு
ஊதியம் பாரா உழைப்பு
நன்மை தரும் உழைப்பு
நலமே நாடும் உழைப்பு!!
அன்பு நிறைந்த உழைப்பு
அலுப்பு மறந்த உழைப்பு
குடும்பத்திற்கான பெரும் உழைப்பு
கூடிவாழ உதவிடும் நல்லுழைப்பு!.
-சி. குருசாமி
No comments:
Post a Comment