Monday, July 24, 2023

 


        தேடல்

எதிலும் தேடல் வேண்டும்

எதையும் தேடல் வேண்டும்

தேடலே வாழ்வின் நாதம்

தேடலின்றி வாழ்வேது நிதம்!

 

நல்லன்பைத் தேடி நிற்போம்

நல்லறிவை நாடிச் செல்வோம்

பல்லறிவை நாடிச் சென்றால்

பகுத்தறிவு வளர்ந்து நிற்குமே!

 

சொல்லறிவை நாடிச் சென்றால்

சொர்கத்தை மனத்தில் கொள்ளலாம்

இல்லறிவை நாடிச் சென்றால்

இல்லாமை மறைந்திடு மன்றோ!

 

கல்லறிவு வாழ்ந்திட வழிகாட்டும்

காலமெல்லாம் மகிழ்ந்திட செய்திடும்

பட்டறிவு பெற்று நின்றால்

பகுத்தாயும் மனத்தைப் பெறுவோமே!

                    ---- சிகுரு



 

அன்பே அகிலம்


அன்புடையார் என்றென்றும் வாழ்வர்

அன்பற்றோர் அன்பை அறிவது

அன்போடு வாழ வழிவகுக்குமே

அகிலம் நிலைக்க வழிகோலுமே!

 

அன்பை அறிவோடு இணைத்து

அன்பைப் புரிதல் வேண்டும்

அகத்திலன்பு சிறக்க வேண்டும்

ஆழ்கடல் நீந்த வேண்டுமே!

 

ஆழ்சிந்தனை பெறமுயல வேண்டும்

அகிலம் என்றும் நிலைப்பதற்கே!

அகமகிழ்ந்து அனைவரும் வாழ்வதற்றே

அகன்ற சிந்தையைப்  பெற்றிடுவோமே!

                    _ சி.குரு

 


Friday, January 13, 2023

 

   

                    உழைப்பு


உள்ளம் உருகும் உழைப்பு

உயர்வைத் தரும் உழைப்பு

கள்ளம் இல்லா உழைப்பு 

காற்றுப்    போன்ற உழைப்பு!


உண்மை  நிறைந்த  உழைப்பு 

ஊதியம் பாரா உழைப்பு 

 நன்மை தரும் உழைப்பு

நலமே நாடும்     உழைப்பு!!


அன்பு நிறைந்த    உழைப்பு

அலுப்பு மறந்த உழைப்பு

குடும்பத்திற்கான  பெரும் உழைப்பு

கூடிவாழ உதவிடும் நல்லுழைப்பு!.  


-சி.    குருசாமி                                                                

                                                                                  

Friday, June 17, 2022

 

கழுகு வேட்டை


பெரிய காட்டில் முற்புதர்கள் நிறைந்து இருந்தன. அங்குக் காட்டுக்கோழிகள் அதிகம் இருந்தன. ஒரு காட்டுக்கோழி தன்னுடைய முட்டைகளை முட்புதரின் அடியில் பத்திரமாக  வைத்து அடைகாத்து வந்தது.  ஒருநாள் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றைக் கண்ணும் கருத்துமாகத் தாய்க்கோழி பாதுகாத்து வந்தன. தாய்க்கோழி சில நேரங்களில் முட்செடிகளுக்கு வெளியே தன்னுடைய குஞ்சுகளைக் கூப்பிட்டுச் செல்லும். அப்போது  அவைகளுக்கு இரை தேடுவதற்கு அது கற்றுக்கொடுக்கும். 

காட்டுக்கோழியின் செயலினை ஒரு கழுகு கவனித்து வந்தது. அது கோழிக்குஞ்சுகளைத் தின்பதற்கு நினைத்தது. அதனால், ஒரு நாள் கோழிக்குஞ்சுகளை நோக்கிப் பறந்து வந்தது. இதனைத் தாய்க்கோழி கவனித்து விட்டது.  அது மிகவும் ஆற்றலுடன் கழுகை எதிர்த்துப் போராடியது. கழுகு தான் தப்பித்தால் போதும் என்று நினைத்தது. அது வேகமாக வானில் பறந்து சென்றது.

கழுகின் செயல் காட்டுக்கோழிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருந்தாலும் கழுகு மீண்டும் வந்து தன்னுடைய குஞ்சுகளைப் பிடித்துத் தின்றுவிடும் என்று காட்டுக்கோழி  நினைத்தது.  அது ஒரு தந்திரம் செய்தது. முட்புதரின் அருகில் தன்னுடைய குஞ்சுகளை  இரை தின்பதற்குப் பயிற்சி அளித்து வந்தது. அவை இரை தின்னும்போது  தாய்க்கோழி உரத்த ஓசை ஒன்றை எழுப்பும். அதனைக்  கேட்டதும் குஞ்சுகள் மின்னல் வேகத்தில் முட்புதருக்குள் சென்று மறைந்து  விடும். இப்படியே தாய்க்கோழி குஞ்சுகளைப் பழக்கி வந்தது. 

ஒருநாள் குஞ்சுகள்  இரை தின்னும்போது கழுகு வேகமாகப் பறந்து வந்தது. அது குஞ்சுகளைப் பிடிக்கச் சென்றது. அதனைக் கவனித்த  தாய்க்கோழி வழக்கம்போல்  உரக்கச் சத்தமிட்டது. குஞ்சுகள் முட்புதருக்குள் சென்றுவிட்டன. வேகமாகப் பறந்து சென்ற கழுகு முட்புதரில் அகப்பட்டுக்கொண்டது. அதிலிருந்து வெளியேறமுடியாமல் அது பட்டினிகிடந்து இறந்து விட்டது. 

                                                                                 - சிகு

 

Thursday, June 16, 2022

 

துள்ளிச் செல்லும் நேரம்


பள்ளி செல்லும் நேரம்

பார்த்துச் செல்ல வேண்டும்

துள்ளிச் செல்லும் நேரம்

துவண்டிடாதே நீயும் 


வண்டி வரும் நேரம்

வளைந்து செல்லும் பாதை

பார்த்துச் செல்ல வேண்டும்

பதறாமல்  என்றும் நீயே!


முந்திச் செல்வர் பார்த்து 

முணங்கிச் செல்ல வேண்டாம்

சிந்தை மாறிப் போகும் 

சிரிக்க மறந்து போவாய்!!


எங்கவீட்டுத் தங்கமே

எங்குபோன போதும்

எங்களை நினைத்துப் பாரு

எல்லாம் மறந்து போகும்!!


இலக்கு ஒன்றை வகுப்பாய்

இழந்திடாமல் நிற்பாய்

உச்சி சென்ற போதும்

உதவ மறந்திடாதே!!


பாட்டி சொல்லிய கதையில்

பார்த்துவாழ அறிவாய்

பகிந்து உண்ணத் தெரிவாய்

பகுத்தறிவை வளர்ப்பாய்!!.

                                                      - சிகு





 

சின்னச் சின்ன குருவி


சின்னச் சின்ன குருவி

சிங்காரக் குருவி 

வண்ண வண்ணக் குருவி

வடிவான குருவி!


வசந்தத்தை நாடிச் செல்லும்

வனமெங்கும் பறந்து செல்லும்

ஐந்தாறு நெற்களுக்கு 

ஐந்துமயில் பறந்திடுமே!!


அயர்வில்லா உழைப்பினை

அகிலத்திற்குக் காட்டிடுமே

சின்னச் சின்ன குருவி 

சிங்காரக் குருவி!!

                          - சிகு

Friday, June 10, 2022

 

மற்றவர் காண!


கணக்கற்ற வடிவத்தைக் காட்சிப்படுத்தி

மனத்திரையில் பதிந்ததை மற்றவர்காண

பொறுப்பில் உள்ளோர் புகழினைப் பரப்ப 

என்றும் அழியா அற்புத வடிவமாக்கி


எண்ணத் திரையில் விண்ணைப் பதித்தனர்

வண்ணத் திரையில் வாழ்வைக்  காட்டினர்

கடுகளவைக் கடலளவாய்க் காட்டிடும் உலகில்

கடலளவைக் கடுகளவாய் காட்டி நின்றனரே



நெற்றிவியர்வை  தனில்நிலம் குளித்திட

 

 

கல்லனைத்தும் காட்சியாக்கி 

கற்பனையை வடிவமாக்கி 


பல்வன் படைத்து தமிழரை உயர்த்தினான்

 

அங்கமெல்லாம் சோர்ந்தாலும் என்றும் அயர்வதில்லை மனத்தாலே

நன்றி கொண்ட மனம்வேண்டும் என்பதை நமக்குக் காட்ட

நல்முத்திரையாக்கி நிலைக்க வைத்தனரே

 

வாழ்வோர் அறிந்திட வகைவகையாய்

படைத்தனரே முத்திரை வடிவில்

காட்சியாகப் படைத்தனரே அச்சுதனில்

 

ஊற்றை பெருகச் செய்து  கொடுக்கும் சரித்திரம்தனை