Tuesday, February 24, 2026

 


                       புறாக்கூடு


புறாவைப் பார்த்து மகிழ்ந்திடுவேம் 

புறா கூட்டையும் பார்த்து மலைப்போம்  

புறாவந்து அடைந்திடும் மாலையிலே

புறா சென்று பறந்திடும் காலையிலே!!


முட்டை சில போட்டிடுமே

மூடி அதுஅடை காத்திடுமே

எட்டி நின்றும் பார்த்திடுமே

இனிய குஞ்சும் வந்திடுமே!!


பறக்கக் கற்றுக் கொடுத்திடுமே

பறந்து பறந்து விழுந்திடுமே

பறந்து நன்கு சென்றிடுமே

தாயை மறந்து வாழ்ந்திடுமே


குஞ்சுதனைக் கூட்டில் காத்திடுமே

கொஞ்சி அகம்  மகிழ்ந்திடுமே

கொஞ்சகாலம் பறந்து போனதுமே

கொஞ்சும் நிலையும் மறந்திடுமே


வாழும் காலம் முடியும் நிலையில் 

வாழ்வைக் கொடுப்பார் யாருமில்லை

கொத்திக் கொத்தி நின்றிடுமே 

கொத்த மறந்து போயிடுமே!!


புறா வாழ்க்கை போன்றதே 

பூரிப்பு நிறைந்த மனித வாழ்க்கை 

எண்ணிப் பார்த்திட வேண்டுமே

எண்ணிக் கற்றிட   வேண்டுமே!!


ஏக்கம் நமக்கு நீங்கிடுமே 

ஏற்றம் வந்து சேர்ந்திடுமே!!

என்றும் மகிழ்ந்து இருந்திடுவோமே

எல்லோரையும் மதித்து வாழ்ந்திடுவோமே!! 

----------சி.குரு


Sunday, February 22, 2026

 

கொடுக்காமலும் எடுக்காமலும்

உல்லாசம் பொங்கிடும் போதுநம்

உள்ளமெல்லாம் நிறைந்து மகிழ்ந்திடுமே!

உண்மையில் நின்று உயர்ந்திடும்போது

உருவமெல்லாம்  சிலிர்த்து நிற்குமே!


உண்மையை நாம் உணர்ந்திடும்போது

கள்ளமில்லா கவிதைபாடி நின்றிடுமே

மெல்ல மெல்ல மகிழ்ந்திடுவோம்

மேன்மை பெறும் செயல்களாலே!


கொடுக்காமல் நாம் இருந்திட்டாலும் 

எடுக்காமல் இருந்திடல் வேண்டும்

எடுக்காமல் இருந்திடும்போது நம்மனம்

படுக்காமல் நிமிர்ந்து நிற்குமே!

- சிகு




                  வாழ்க்கை


வண்ணமயமாக நாம் வாழ்ந்திட
வாழும் முறை அறிந்திட வேண்டும்
வற்றாத பிரச்சினை வந்திடினும் 
வளமாக மாற்றிட வழிகள் பலவுண்டு

வழிதெரியா மனிதன்கூட வழியறிவான்
வழியறியும் சிந்தனைப் பெருக்கத்தாலே
வாழ்கைதனில் உயர்ந்து நிற்பான்  
வாழும்முறை அவன் அறிந்திடும்போதே.

செல்லும்வழியில் சிக்கல் பலவாயினும்  
சிறப்பினை உணர்ந்து சென்றிட வேண்டும்
சிறப்பினை உணர்ந்து சென்றிடும்போது
சிக்கல்தானே சுழியமாகிச் சிதறிப்போகுமே!

----------------------------சி.கு


Tuesday, February 3, 2026

 

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!


சொல்லாமல் சொல்லுவோம் எதனையும்

சொல்லும்போது ஏற்படும் மனவருத்தம்

சொல்லாமல் சொல்லும்போது மறைந்திடுமே

சொன்னதை சொன்னாலும் வருத்தமே

சொல்லாமல் இருந்தாலும் பெருவருத்தமே!


யார்சொன்னாலும் கேட்காத பிள்ளைகளும்

கேட்டுத்தான் ஆவாரே சொல்பவர் சொன்னால்

அன்புடன்  சொன்னால் அமைதியாக இருப்பர்

அதட்டிச்  சொன்னால் மறுத்திடுவார்!


அம்மா சொன்னாலும் சிலநேரம் எதிர்த்திடுவர்

அறிவுரை சொன்னாலே வெறுத்திடுவார் 

சொல்லுவார் சொன்னால் சுவரும் மறைத்திடாது

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!.