Sunday, April 20, 2025

 பார் போற்றும்  நற்குணம்


பகையில்லா நல்லுலகம் என்றும் வேண்டும்

பகுப்பில்லா உள்ளம் நமக்கு வேண்டும்

பார்போற்றும் நற்குணம் சிறக்க வேண்டும்

பரந்துபட்ட சிந்தனை வளர வேண்டும்!


சங்கக் கவிஞரின் கனவு மெய்ப்பட வேண்டும்

சங்கமிக்கும் நல்லுள்ளம் நிலைக்க வேண்டும்

பூனையும் கிளியும் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்

புவியில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்!


கார்போன்ற நற்கொடை நெஞ்சம் வேண்டும்

காட்டாறு போலது விரிந்திட வேண்டும்

கல்வியில் இவ்வுலகம் சிறந்திட வேண்டும்

கல்லாமை இல்லாமை ஆகிட வேண்டும்!

- சிகுரு

 


கசக்கிப் பிழிந்த வேடன்


சோவென்று பொழிந்தது மழை

சொர்க்கமாக நினைத்தது வயல்

சொல்லிப் பூத்தன பூக்கள்

சொல்லாமல் சென்றன ஈக்கள்!


கொண்டு சென்றன தேனை

குடித்து மிதந்தன காற்றினில்

கூட்டை அடைந்தன ஈக்கள்

கொட்ட மறந்து தூங்கின!


காட்டில் வாழ்ந்த மனிதனோ

கண்ணில் பட்ட தேனடையை

கசக்கிப் பிழிந்தான் கருவுடனே

கதறித் துடித்தன ஈக்கள்!


என்ன மகிழ்ச்சி மனத்தில்

துள்ளிக் குதித்தான் வேடன்

கொண்டு கொடுத்தான் பண்ணையில்

கூலி கொடுத்தார் பண்ணையாரே!


இனிப்பாய் நினைத்தான் வேடன் 

இதயம் பிழிந்ததை மறந்தான்

உள்ளம் துடித்த ஈக்களோ 

உலகை மறந்தன அப்பொழுதே!

------சிகுரு


Friday, January 10, 2025

 11.01.2025

சிறுகதை 


நினைவு 

இரவு ஏழு மணி. இருள் சூழ்ந்துவிட்டது. வானம் மப்பும் மந்தாரமாக இருந்து. இப்பப் பொழிவோம் பிறகு பொழிவோம் என்று தக்கத் தருணத்திற்குக் காத்துக்கொண்டிருந்தது மழை. அந்நேரத்தில் நிலவின் முகம் தென்படத்தொடங்கியது. அந்த இருட்டில் கல்தரையில் காலடி எடுத்துவைக்கும் சத்தம் மெல்ல வந்தது. யோரே இருட்டில் வருகிறார்கள் அம்மா என்று வேணி கூறினாள். யாரும் வரவில்லை அது உன்னுடைய பிரமை பேசாமல் வா என்று அம்மா மேகலை கூறினார். அவரின் குரல் சற்று அதட்டலுடன் தூக்கி இருந்தது. மனத்தில் வேகம் பிறந்தது.

 

பள்ளியில் இருந்து அம்மாவுடன் திரும்பி வந்துகொண்டிருந்த வேணி அம்மா சொல்லியதைக் கேட்டதும் வாடத்தொடங்கினாள். அந்த நேரத்தில் மீண்டும் அதே காலடிச் சத்தம். இப்பொழுது வேணியின் தாயாருக்குச் சற்றுப் பயம் ஏற்பட்டது. நெஞ்சு படபடவென மெல்ல மெல்ல அடிக்கத் தொடங்கியது. திரும்பிப் பார்க்காமல் அமைதியாக நடந்தார். ஆனால், காலடிச் சத்தம் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்தது. சுமார் ஐம்பது அடி தூரம் அவர்கள் வேகமாக நடந்து சென்றபின், சத்தம் நின்றது. என்னதான் நடந்து வருகிறது என்ற அச்சத்துடன்  மேகலை திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள் கண்ட காட்சி நெஞ்சை உலுக்கியது. பெரியவர் ஒருவர் பாதையின் ஓரத்தில் இருக்கும் சிறிய சுவரில் அமர்ந்து தரையில் உணவுப்பொட்டலத்தை விரித்து வைத்திருந்தார்,

 

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பூனை அங்கு வந்தது. அது பெரியதாக இருந்தது. சாம்பல் நிறத்தில் காட்சி தந்தது. மெல்லத் தரையில் விரித்திருந்த உணவுப்பொட்டலத்துக்கருகில் சென்றது. மெல்லிய குரல் எழுப்பியது. மூன்று குட்டிகளும் அங்கு வேகமாக ஓடி வந்தன. எல்லாம் பகிர்ந்து உண்டன. வயிறு நிரம்பியது. வாழும் இடத்தை நினைத்தன. முதலில் குட்டிகள் அருகில் இருந்த அடர்ந்த செடிகளுக்கிடையே சென்றன. அப்போது மெல்லிய ஒலி வந்தது. தாய்ப்பூனை தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து  அந்தப் பாதையின் வழியே புதரை நோக்கிச் சென்றது. இதனை அன்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

 

அந்த முதியவரை அச்சமின்றி அருகில் வந்து உற்றுக் கவனித்தனர் தாயும் மகளும். மேகலையின் கண்களிலிருந்து கண்ணீர் மெல்லக் கசிந்தது. வாணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சிறிய பிள்ளைதானே!. மேகலையைக் கவனித்த அந்த  முதியவர் அவளுக்கு ஆறுதல் கூறிச்சென்றார். அவர் அங்கிருந்து மறையும்வரை தாயும் மகளும் மாறுபட்ட பார்வையில் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.  

சிகுரு


Thursday, September 7, 2023

 


கவிதை - கூடியகம் மகிழ


சின்ன சின்ன பறவை

சிறகை விரிக்கும் பறவை

வண்ண வண்ண பறவை

வடிவம் மின்னும் பறவை


வட்டமிட்ட மிட்டுப் பறக்குதே 

வாழ நினைத்துப் பறக்குதே

காலால் பிடித்துப் பறக்குதே

காட்டில் போய் நிற்குதே!


துள்ளித் துள்ளிப் பறக்குதே

துயரம் மறந்து பறக்குதே

தன்னை மறந்து பறக்குதே

தன்வாழ்வு சிறக்கப் பறக்குதே!


அங்கும் இங்கும் பறக்குதே

அழகாய் விரித்துப் பறக்குதே

அலகால் கொத்தி எடுக்குமே

அளவாய் உண்டு மகிழுமே!


குஞ்சை நினைத்துப் பறக்குதே

கூட்டை நோக்கிப் பறக்குதே

கூடியகம் மகிழப்  பறக்குதே  

கொள்ளை இல்லா இன்பத்தாலே!

                                                 - சிகுரு

Thursday, August 24, 2023

 

அலுவலக மின்னஞ்சல்

ஒரு பிரிவு 

பாராட்டு மின்னஞ்சல்


எழுதுபவர் பற்றிய விவரம் 

கடிதம் எழுதுவதன் நோக்கம்

பாராட்டுக்குப் பொருத்தமான தகவல்களை அளித்தல்

எடுத்துக்காட்டு

சாதனைசெய்த மேதைகள், உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், குடும்ப வளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள்,  நடுவு நிலைதவறாத தீர்ப்பு வழங்குபவர்கள், ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டுபவர்கள், அன்பான குணம் படைத்தவர்கள், சிறந்த பண்பு நிறைந்தவர்கள், 

இயற்கைப் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுத்ததன் காரணத்தால் பாராட்டுதல், ஏழை நாடுகளுக்கு உதவி செய்ததால் பாராட்டுதல், முற்போக்குச் சிந்தனை வளர்ச்சி உடையவராக இருந்தால் பாராட்டுதல்

உழைப்பால் உயர்ந்த நல்வழிகாட்டியைப் பாராட்டுதல், அறிவியல் சிந்தனையாளர்களைப் பாராட்டுதல், பாராட்டும் வண்ணம் சிறப்புப் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரைப் பாராட்டுதல், இலக்கியச் சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் பாராட்டுதல், நல்வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்.


Tuesday, August 15, 2023

 

ஒலிப்பதிவு செய்யவும்

ஒரு காட்டில் இரண்டு சிங்கங்கள் வசித்தன. அவை இரண்டும் நன்றாகப் பழகும் குணமுடையவை. எப்போதும் மற்ற விலங்குகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்ளும். ஆனால், நாள்தோறும் பசிக்கும்போது தனக்குப் பிடித்த விலங்குகளை மட்டும் கொன்று தங்களுடைய பசியைப் போக்கிக்கொள்ளும்.


அதனால், மற்ற விலங்குகளுக்குச் சிங்கங்களைப் பிடிக்காது. அவை சிங்கத்தைப் பார்த்தாலே ஒழிந்துகொள்ளும். இந்தச் செயல் சிங்கங்களுக்கு வருத்தத்தைத் தந்தது. அவை பசி இல்லாமல் இருந்தால் மற்ற விலங்குகளைக் கொல்லும் நிலை ஏற்படாது. அந்த இனமும் அழியாது என்று நினைத்தது. அதனால், அவ்வப்போது அவை வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.  ஆனால், இயற்கை விலங்குகளைக் கொன்று தின்னும் பழக்கத்தை விலங்குகளுக்குக் கொடுத்ததன் ரகசியத்தை அவை புரிந்துகொள்ளவில்லை. அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டால் அவை மகிழ்ச்சியுடன் வாழும்.  

சிகுரு

Monday, August 14, 2023

  பிழை நீக்கம்  

விலக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கறுத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாக புரியவில்லை என்றாலும் அதனை வக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுறுக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெலிவாகப் புரிந்துகொள்ளும் வன்னம்  இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாரும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் செல்லாகவும் கொள்ளலாம்.


பிழை நீக்கம் 

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கறுத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்கு  சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன்  பொருல் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பல்லமாக இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்கு காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமைநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான்.