Monday, July 3, 2017

மரபும் பண்பாடும்
முன்னோரும் நாமும் – கண்டதை அறிவோம்!

  வகுப்பு: உயர்நிலை 2 வழக்கம் (ஏட்டுக்கல்வி) (2NA)

ஒரு காலத்தில் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த தமிழர்கள் தம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழி தேடி தேடினர். அவர்கள் செடி, கொடிகளின் மூலம் கிடைக்கும் பூக்கள், காய் கனிகள், வேர்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். அவற்றின் மருத்துவக் குணங்களைக் கண்டறிந்தனர். அதனால்தான், ‘ஆயிரம் வேர்களைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்ற பழமொழி தோன்றியது. வைத்தியர்கள் மூலிகை மருத்துவத்தைக் கண்டறிந்தனர்.  

மூலிகையின் சிறப்பினை நாம் பின்வரும் கவிதையின் மூலம் அறியலாம்.  

‘மூலிகை என்பது மாமருந்தாம்
முற்றிலும் பிணியைப் போக்கிடுமாம்!
முகத்தைப் பொலிவாய் மாற்றிடுமாம்
முத்துப் போல அழகூட்டிடுமாம்’

எனவே, நம் வாழ்வை வளமாக்கும் சிறப்புப் பெற்ற மூலிகை வகைகளில் சிலவற்றை அவசியம் அனைவரும் அறிந்துகொள்ளும் போது நோய் நொடி வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மஞ்சள்

       மஞ்சள் என்ற மூலிகைப் பொருள், தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. மஞ்சளை விரல் மஞ்சள், கிழங்கு மஞ்சள் என்று பிரிப்பார்கள். விரல் மஞ்சள் பெரும்பாலும் சமையலுக்கும், கிழங்கு மஞ்சள் முகத்தில் பூசிக்கொள்வதற்கும் பயன்படுகிறது. இது  பல பல நோய்களைக் குணமாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக, மஞ்சள் கிருமியைக் கொல்வதற்கும் உடலின் வெப்பத்தைத் தணிப்பதற்கும் சளித்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கும் பயன்படுகிறது.

இஞ்சி

      இஞ்சி என்ற பெயரில் உள்ள செடியின் வேரில் உருவாகும் ஒரு வகைக் கிழங்கு ஆகும். இச்செடியின் வேரில் கொத்துக்கொத்தாக இஞ்சி உருவாகும். இது பசியைத் தூண்டும்.  மேலும், இது தலைவலி, வாந்தி போன்றவற்றை நிறுத்துவதற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் சிறப்பை உணர்ந்த நம்முன்னோர் இதனை ‘வேர்க்கனி’ என்று அழைத்தனர்.



எலுமிச்சைப் பழம்

எலுமிச்சையில் பல வகை  உண்டு. இது  மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெயில் காலத்தில் அதிகம் பயன்படுகிறது. இதன் சாறு உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு பசியையும் தூண்டும்.  எலுமிச்சைப் பழம் வயிற்றில் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளை நீக்கும். கனிகளுள் சிறந்த மருத்துவக் குணத்தை இது பெற்றிருப்பதால் இதனை, ‘இராஜக்கனி’ என்று அழைப்பார்கள்.


நமக்கு அன்றாட வாழ்க்கையில் பயன்படும் ஏராளமான உணவுப் பொருள்கள் மருத்துவக் குணத்தை உடையவை.  அவற்றின் சிறப்பினைப் பற்றி நாம் மாணவப் பருவத்தில் அறிந்துகொள்ளும் போது பெற்றோர் வழங்கும் சத்துள்ள உணவுகளை அவசியம் உண்போம். இதன் மூலம் `உணவே மருந்து` என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். 


1. நம் முன்னோர்கள் எவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தனர்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

2. மூலிகைகளில் சிலவற்றைப் பற்றி நாம் அறியாமல் இருந்தால் எத்தகைய பாதிப்பு
ஏற்படும்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

3. மஞ்சள் எவற்றிற்கெல்லாம் பயன்படுகின்றது?
 ___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________


4. இராஜக்கனி என்பது எது? ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பயிற்சி 2

தொடர்பயிற்சி

மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை இணையப்பக்கத்தில் அறிந்து ஒளிப்பதிவு செய்யவும்.                     

பயிற்சி இரண்டில் ஈடுபடுவதற்கு வேண்டிய உதவியைச் செய்யும் இணையப்பக்கத் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.


 குழுவினருடன் சேர்ந்து கதையைப் பற்றிய கருத்துகளைப் பேச்சுத்தமிழில் வகுப்பில் பகிர்ந்து கொள்ளவும்.

கந்தபுரத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்தார். அவர் மிகச் சிறந்த வியாபாரி. கோவிந்தசாமி எப்பொழுதும் பணம் சம்பாதிப்பதில் மட்டும் தமது கவனத்தைச் செலுத்தி வந்தார். அவர் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்.  அதனால், அவர் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிட மறந்துவிடுவார். அவரது அம்மா சாப்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி கோவிந்தசாமியிடம் எடுத்துக்கூறினார். அவருடைய அம்மாவின் அறிவுரைக்குக் கோவிந்தசாமி  முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காலப்போக்கில் கோவிந்தசாமிக்குப் பசி எடுப்பது குறைந்துவிட்டது. அவர்  தம் நண்பர்களிடம் தனக்கு அதிகமாகப் பசி தோன்றுவதில்லை என்றும் ஒருநாள் திடீரென்று மயக்கம் ஏற்பட்டது என்றும் கூறினார். அவருடைய நண்பர்கள் அவருக்கு அறிவுரை கூறினர்.

கோவிந்தசாமி மருத்துவரிடம் சென்று அவருடைய நிலையை விளக்கினார். மருத்துவர் கோவிந்தசாமி சொல்வதைக் கேட்டு உடலைச் சோதித்துப் பார்த்தார். மருத்துவர் இறுதியில் உடலுக்குத் தேவையான அளவு இரத்தம் உடம்பில் இல்லை என்றும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறினார்.

 கோவிந்தசாமி மிகவும் வருத்தமடைந்தார். மருத்துவர் நாள்தோறும் சாப்பிட வேண்டிய காய்கறிகளின் அளவையும் ஊட்டச் சத்து உணவின் அளவையும் பட்டியல் இட்டு கோவிந்தசாமியிடம் கொடுத்தார். அப்போதுதான்  கோவிந்தசாமி `உணவே மருந்து` என்ற உண்மையை உணர்ந்து கொண்டார். 

வணக்கம் மாணவர்களே!
கண்டதை அறிந்தால் பண்டிதர் ஆவோம் என்ற கதையைக் கவனமாகக் கேட்டு அதில் இடம்பெற்றுள்ள வாழ்க்கைத் திறனை அறிந்து கொள்ளுங்கள்.

கண்டதை அறிந்தால் பண்டிதர் ஆவோம்

சோலையூர் என்ற கிராமத்தில் கந்தசாமி என்வர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் வசதியானவர். அவர் சொல்வதைத்தான் அந்தக் கிராம வாசிகள் கேட்கவேண்டும் என்று நினைப்பவர்.

சோலைசேரிக்குப் புதிய ஆசிரியர் ஒருவர் வந்தார். அவருடைய பெயர் முத்தழகு. அவர் மரியாதை நிமித்தமாக கந்தசாமியைச் சந்திக்கச் சென்றார். அப்பொழுது எலுமிச்சைப் பழம் ஒன்றைக் கந்தசாமிக்குக் கொடுத்தார். அதை வாங்கியபோது கந்தசாமியின் முகம் மாறியது.  ஆசிரியர் அவருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தவில்லை என்று நினைத்தார். ஆசிரியர் எதனையும் பொருட்படுத்தாமல் கந்தசாமிக்கு நன்றி கூறிவிட்டு அவருடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

கந்சாமியின் மகன் முத்தகனிடம் படித்து வந்தான். ஒருநாள் அவனுக்குக் காய்சல் அதிகமாக இருந்தது. அவனைப் பள்ளியில் இருந்து வீட்டிற்கு முத்தழகு அனுப்பி வைத்தார். மாலையில் முத்தழகு கந்தசாமியின் வீட்டிற்குச் சென்றார். அவர் கடையில் வாங்கிவந்த  இஞ்சியை முத்தழவிடம் கொடுத்துவிட்டு, அவருடைய வீட்டில் கந்தசாமியின் மகனைப் பார்ப்பதற்கு உட்கார்ந்து இருந்தார். அப்பொழுது கந்தசாமியின் மகள் முத்தழகிற்கு மரியாதை நிமித்தமாகக் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அப்பொழுது அவள் முகத்தில் தேமல் இருப்தை முத்தழகு கவனித்து விட்டார்.

முத்தழகு சிறிது நேரத்தில் கடைக்குச் சென்று மஞ்சள் வாங்கிவந்தார். அதனைக் கந்தசாமியின் மகளிடம் கொடுத்துவிட்டு தம்முடைய வீட்டிற்குச் சென்றார். முத்தழகின் செயலைக் கண்ட கந்தசாமிக்கு முத்தழகின் மீது கோபம் வந்தது. முத்தழகு தம்மை இஞ்சி தின்ற குரங்காகவும் மிகப்பெரிய கஞ்சனாகவும் நினைத்துவிட்டதாக எண்ணி வருத்தப்பட்டார்.

சிறிது நேரத்தில் கந்தசாமியின் வீட்டுக்கு வைத்தியர் ஒருவரை வேலைக்காரன் அழைத்து வந்தான். அவரிடம் முத்தழகு செய்த செயலைப் பற்றிக் கூறினார். அதனை மிகவும் பொறுமையாக வைத்தியர் கேட்டார். பின்னர் அவர், முத்தழகு வாங்கி வந்த மூன்று பொருள்களின் மருத்துவக் குணத்தையும் விளக்கினார். அப்போதுதான் கந்தசாமி, ‘கண்டதை அறிந்தால்; பண்டிதர் ஆவோம்’ என்ற பழமொழியின் கூற்றினை  உணர்ந்துகொண்டார்.  


தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி



    

Saturday, May 13, 2017



வயிறு

வயிறு இல்லையேல் வாழ்வில்லை
வளமான வாழ்வு இல்லை
இன்ப மில்லை துன்பமில்லை
இருள் இல்லை ஒளியில்லை

    



தவறே செய்யா மனிதருண்டோ!

நம்மை அறிவோம்
நாளும் உயர்வோம்

பிறர்

சொல்வதில் உண்மை இல்லை
சொல் சூத்திரத்தில்  உண்மை உண்டு
சூட்சமத்தில் அதனை அறிவோம்
சுற்றத்தோடு இணைந்து நிற்போம்

குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை
சொல்லிச் சென்றார் முன்னவர்தாமே
சொன்னதில் என்ன தவறு உண்டு
சொன்னதை நினைப்போம இன்று!


நம்மை அறிவோம்
நாளும் உயர்வோம்

நலமாய் வாழ நாளும் கற்போம்
கற்றவழியை என்றும் தொடர்வோம்
தவறுவந்தால்திருத்திக்கொள்வோம்
தவறே செய்யா மனிதருண்டோ!





Saturday, April 9, 2016



மாற்றம்

மாற்றம் பெறுவோம் என்றும்
மனம் மாற்றம் பெறுவோம்!
ஏற்றம் பெறுவோம் இன்றே
ஏற்றம் பெறுவோம் நாமே!.

நட்பை வளர்ப்போம் நாளும்  
நல்லோர் நட்பை வளர்ப்போம்!
சொல்வதை ஆய்வோம் பிறர்
சொல்வதை நாளும் ஆய்வோம். 

மெய்ப்பொருள் காண்போ மதில் 
மெய்வழி என்றும்  நடப்போம்! 
உண்மையை நினைப்போம் என்றும் 
உறவோடு இணைந்து இருப்போமே! 



சூழல் உருவாக்கவும்


ஆய்வோம்

___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ 


மெய்ப்பொருள்

___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ 

உறவோடு

___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________






அனைவருக்கும் வணக்கம்

தொடர்ச்சியாக சில... மாணவர்களுக்கு நினைவூட்டல்

தயாரித்தவர் சி. குருசாமி - குறிப்பிலிருந்து ...

மாணவர்கள் சுருக்கி வரைதலின் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்


சுருக்கி வரைதல் என்றால் என்ன?

ஒருவரின் பேச்சையோ எழுத்துவடிவத்தையோ சுருக்கிச் சொல்வது சுருக்கி வரைதல் ஆகும். இது ஒரு கலையாகும். சுருக்கி வரைதல் நம் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் ஒரு செயலாகும்.

ஒருவர் பேசிய பேச்சைச் சுருக்கிச் சொல்லும்போது சொல்லவேண்டிய முக்கியமான கருத்தைக் கட்டாயம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பேசியும் பயனில்லாமல் போய்விடும். சுருங்கச் சொன்னால் `சுருங்கச் சொல்லி விளங்க வேப்பதே சுருக்கி வரைதல்` ஆகும்.

ஊடகத்துறையில் சுருக்கி வரைதலின் பயன்பாடு மிகவும் அதிகம். எனவேதான் ஊடகத்துறை நண்பர்கள் இப்பயிற்சியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சிறந்த பயிற்சிக்குப் பின்னர் சுருக்கி வரையும் திறனில் கைதேர்ந்தவர்களாகி விடுவார்கள்.

சுருக்கி வரையும்போது கவனிக்கவேண்டியவை.

1. கொடுக்கப்பட்ட பகுதியைக் கவனமாகப் படித்துப் பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.

2.
பகுதியில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்துகளையும் துணைக் கருத்துகளையும் அடையாளம் காணவேண்டும்.


3.
பகுதியில் உள்ள கருத்துகளைச் சொந்த நடைக்கு மாற்றவேண்டும்.

4.
சொந்தக் கருத்துகளை எழுதிவிடக்கூடாது.


5.
பகுதியில் உள்ள உண்மைக் கருத்துகளை மறுத்து எழுதிவிடக்கூடாது.

6.
இயல்பான நடையில் எழுதவேண்டும்.


7.
முதலில் நகல் ஒன்று தயாரிக்கவேண்டும்.

8.
நகலில் மாற்றம் செய்துகொள்ளலாம்.


9.
நகலை அடிப்படையாகக் கொண்டு அசல் தயாரிக்கவேண்டும்.

10.
கேட்கப்பட்ட சொல் அளவு சரியாக இருக்கவேண்டும்.


11.
சிறிய வாக்கியங்களாக எழுதவேண்டும், ஏனென்றால் சிறுவாக்கியங்களில் எழுதினால் வாக்கியப்பிழை ஏற்படாது.

12.
தொடர்புடைய சொற்களுக்குப் பதில் கூட்டுச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.


13.
வர்ணனை, பழமொழிகள், மேற்கோள்கள், உதாரணங்கள் போன்றவற்றை விட்டுவிடவேண்டும்.

14.
பிழை இல்லாமல் எழுதுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
15.
இணைப்புச் சொற்களைப் (ஆனால், அதனால், எனவே, என்றாலும்) பயன்படுத்தவேண்டும்.

16.
கொடுக்கப் பட்ட பகுதி பல பத்திகளாக இருந்தாலும் சுருக்கி வரையும்போது ஒரே பத்தியில் எழுதவேண்டும்.

17.
சுருக்கி வரையச் சொல்லும் பகுதியைத் தான் சுருக்கி எழுதவேண்டும்.

18.
சுருக்கி வரைந்த பின்னர் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவேண்டும்.


(எ - டு)

ஒருகாட்டில் சிங்கம், புலி, கரடி, மான் போன்ற விலங்குகள் ஏராளம் வசிக்கின்றன. சிங்கத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் பயந்து நடுங்கும். சிங்கம் நாள்தோறும் தனக்குப் பிடித்த விலங்குகளை வேட்டையாடித் தின்னும். மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்தமான உணவு. அதனால், மான்கள் சிங்கத்தைக் கண்டால் மிகவும் வேகமாக ஓடி ஒளிந்துகொள்ளும்.

சிங்கம் ஒரு மானைப் பிடித்து உண்ண நினைத்தால் அந்த மானை மட்டுமே விரட்டிச் செல்லும். ஓடுகிற மான் களைப்பு அடைந்தவுடன் அது சிங்கத்திற்குப் பலியாகிவிடும். பிடித்த மானின் மாமிசத்தை வயிற்றுக்கு உண்டபின் சிங்கம் தன் இருப்பிடத்தை நோக்கிச் செல்லும். இருப்பிடத்தில் நன்றாக ஓய்வு எடுத்தபின்னர் அது சுறுசுறுப்புடன் செயல்படும்.

மாணவர்களே! இங்கே குறிக்கப்பட்டுள்ள முக்கியக் கருத்துகளை முதலில் பார்ப்போம்.

1. காட்டில் ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன
2.
மற்ற மிருகங்கள் சிங்கத்தைப் பார்த்தால் அஞ்சும்
3.
மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்த உணவு
4.
மான்கள் ஓடி மறையும்
5.
ஓடும் மானை விரட்டிப் பிடித்து உண்ணும்
6.
இருப்பிடத்தில் ஓய்வு எடுத்தபின்னர் சுறுசுறுப்பாகிவிடும்

விளக்கம்

மேலே குறிப்பிட்டுள்ள பகுதியைச் சுருக்கி எழுதும்போது பகுதியில் குறிப்பிட்டுள்ள ஆறு கருத்துகளையும் விட்டுவிடக்கூடாது.

இந்த ஆறு கருத்துகளையும் அடையாளம் பார்த்த பின்பு அவற்றை ஒரே பத்தியாக எழுதவேண்டும்.

(எ-டு) சுருக்கிய பகுதி

காட்டில் வாழும் மிருகங்கள் சிங்கத்தைக் கண்டால் அஞ்சும். மானின் மாமிசத்தைச் சிங்கம் வரும்பிச் சாப்பிடுவதால் அதனை விரட்டிப் பிடித்துத் தின்னும். அது இருப்பிடத்தில் ஓய்வு எடுத்த பின்னர் சுறுசுறுப்புடன் இருக்கும்.

சொற்களின் எண்ணிக்கை 22

பகுதி 2.

அழகான மயில்கள் கருமேகக் கூட்டம் வானில் திரண்டு நிற்பதைக் கண்டன. உடனே, அவை தங்களுடைய நீண்ட அழகிய வண்ணத் தோகையை விரிக்கத்தொடங்கின. அவற்றின் தோகை விசிறியைப் போல் அழகாக விரிந்தன. விரிந்த தோகை பார்ப்பவரின் மனத்தைக் கவரும் வண்ணம் இருந்தது. மயில் தோகையின் அழகிய வண்ணத்தைக் கண்டவர்கள் வாய்திறந்து பார்த்த வண்ணம் இருந்தனர். மயில்கள் அவர்களைக் கவனிக்காமல் வானத்தைப் பார்த்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தன.

விளக்கம்

இப்பத்தியில் வர்ணனையும் உவமையும் இடம்பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கி எழுதும்போது எழுதக்கூடாது.
கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சுருக்கி வரைதல்


நகல்
மயில்கள் மேகத்தைக் கண்டு தோகையை விரித்து ஆடின. அழகிய தோகையினை வியப்போடு பார்த்தனர். அவர்களைப் பார்க்காமல் மயில்கள் வானத்தைப் பார்த்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன. (20 சொற்கள்)

அசல்

மயில்கள் மேகத்தைக் கண்டவுடன் தோகையை விரித்தன. அதனைக் கண்டவர்கள் தன்னை மறந்து பார்த்தனர். ஆனால், மயில்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன.

சொற்களின் எண்ணிக்கை 15


உயர்தமில்மானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பனுவலைப் படித்த பின்னர் இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.

பயிற்சி 1.

மனிதனின் வாழும் காலத்தைக் கணக்கிட்டு அறிஞர்கள் பல பருவங்களாகப் பிரிக்கின்றனர். அவற்றுள் ஒன்று பள்ளிப் பருவம். பள்ளிப் பருவம் மற்ற பருவங்களைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பருவமாகக் கருதப்படுகிறது. இப்பருவத்தை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதைப் பொறுத்துத்தான் அவரின் எதிர்கால வாழ்க்கை அமையும். உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் நாம் பல முக்கியமான செயல்களில் ஈடுபடுகிறோம். எனவே, இதனை மாணவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பருவம் என்று குறிப்பிடலாம். இப்பருவத்தில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். காலத்தைப் பொன்போல் போற்றி வரவேண்டும்.

சுருக்கிஎழுதவும்


________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



பயிற்சி 2 இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.

தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் உண்டு உறங்கி மகிழ்கிறார்கள். அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தவுடன் படிக்கும் பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்குக் குழந்தைப் பருவம் மாறத்தொடங்குகிறது. அதனால், பெற்றோருடன் பேசும் நேரத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்கிறார்கள். இக்காலத்தில் தொடக்கப் பள்ளியில் இருந்த மென்மைக் குணம் சற்று வலிமைபெறத் தொடங்குகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை சிறிதளவு கூடுகிறது.

இந்தத் தன்னம்பிக்கையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் போது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் தங்களுக்குக்கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும்.

இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.


______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
உயர்தமிழ் மாணவர்கள் கீழ்க்கண்ட பனுவலைப் படித்து இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி வரையவும்.
பயிற்சி 1.

மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவுடனே நண்பர்களைத் தேர்ந்தெடுக்காமல் சிறிதுகாலம் தம்முடன் பயிலுபவர்களின் குணத்தினை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆராய்ந்து பார்க்காமல் பழகும் பழக்கம் மிகப்பெரிய துன்பத்தைத்தரும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். எனவே, நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ள முயற்சி செய்தால் சிறந்த நன்மை உண்டாகும். நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நமக்குக் கல்வியிலும் வாழ்க்கையிலும் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

நண்பர்கள் நம்மைவிட அறிவில் உயர்ந்தவர்களாகவோ சமநிலை உடையவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் நம்மோடு தொடக்கப் பள்ளியில் படிக்காத மாணர்களாக இருந்தாலும் பரவாயில்லை. நம் நண்பர்கள் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நண்பர்கள் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களாக இருந்தால் நமக்கு அவர்கள் கலங்கரை விளக்கம் போல் வழிகாட்டுவார்கள். எனவேதான் நீ உன் நண்பனை முதலில் சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என்று பெரியர்கள் கூறுவார்கள். 

இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி எழுதவும்
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________________

பயிற்சி
பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். எனவே, நட்பின் சிறப்பினைப் பற்றிக் கூறவந்த பழைய பாடல் ஒன்று கரும்பின் மேல் பாகத்திலிருந்து கடித்துத் தின்பதைப் போல் பழகப்பழக நட்பு இனிப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இங்கு இனிப்பு என்பது நமது மனத்தையும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மகிழ்ச்சியையும் குறிக்கும்.

ஒருவேளை நாம் தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் கவலைப்படக்கூடாது. தவறான இயல்பினை உடைய நண்பர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் நாம் பெற்றுக் கொள்ளவேண்டும். நம்மிடம் உள்ள பண்பு நிறைந்த குணத்தை அவர்களிடம் சிறிது சிறிதாக வளர்க்க முயல வேண்டும். இவ்வாறு நாம் செய்தால் நல்ல குடிமக்களை உருவாக்கிய பெருமை நம்மைச் சேரும்.

இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி எழுதவும்

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி