Thursday, April 15, 2010

பயிற்சி 18 / 2010
உனக்குப் பொருத்தமானவற்றிற்கு நேரில் உள்ள கட்டத்தில் புட்குறி (√ ) இட்டு உன்னை மதிப்பிட்டுப் பார்க்கவும்.

வ. எண்
சொற்கள்
புட்குறி
1
கனிவுகொண்ட மனம்
2
தனிநபர் சிந்தனையை வளர்த்தல்
3
ஆழமாகச் சிந்தித்தல்
4
விடாமுயற்சி
5
நல்லவராகவே வாழ முயற்சி செய்தல்
6
கடின உழைப்பு
7
பிறருடைய கருத்தையோ முயற்சியையோ தடுக்காமல் இருத்தல்
8
கூட்டு முயற்சி
9
வேற்றுமையில் ஒற்றுமை
10
சிறந்த பண்புக் கூறுகளைப் பெற்றிருத்தல்
11
ஒற்றுமை உணர்வு
12
கூட்டுறவே நாட்டுறவு
13
உண்மையான உழைப்பைப் புரிந்துகொள்ளுதல்
14
பிறரை வாய்ப்பிருக்கும்போதுகூட அச்சுறுத்தாமல் வாழுதல்
15
பிறர் உழைப்பைச் சுரண்டாத மனம்


தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)
பயிற்சி 17 / 2010

· நம்மிடம் பொதுவாக இருக்க வேண்டிய பண்புகள்
· (கட்டுரையில் பொதுவாக அமையும் கருத்துகள்)

ஆழமாகச் சிந்தித்தல்
கடின உழைப்பு
விடாமுயற்சி
சிறந்த பண்புக் கூறுகளைப் பெற்றிருத்தல்
வேற்றுமையில் ஒற்றுமை
ஒற்றுமை உணர்வு
கூட்டுறவே நாட்டுறவு
கூட்டு முயற்சி
தனிநபர் சிந்தனையை வளர்த்தல்
பிறர் உழைப்பைச் சுரண்டாத மனம்
பிறரை வாய்ப்பிருக்கும்போதுகூட அச்சுறுத்தாமல் வாழுதல்
உண்மையான உழைப்பைப் புரிந்துகொள்ளுதல்
பிறருடைய கருத்தையோ முயற்சியையோ தடுக்காமல் இருத்தல்
நல்லவராகவே வாழ முயற்சி செய்தல்
முடிந்தவரை உண்மை பேசுதல்
தவற்றை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை
தெரியாததைத் தெரியாது என்று தைரியமாகக் கூறும் மனம்
தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருத்தல்
இனத்தின் சிறப்புத் தன்மையைப் புரிந்துகொள்வதோடு மற்ற இனத்தினரையும் மதிக்கத் தெரிந்துகொள்ளுதல்
உதவி செய்யும் மனப்பான்மை
அறிவைப் பெருக்கி ஆற்றலை வளர்த்துக்கொள்ளுதல்
பிறர் மனம் புண்படாமல் பேசும் தன்மை
உயர்விலும் பணிவன்பு
கனிவுகொண்ட மனம்
குடும்பத்தினரை மதிக்கும் மனப்பான்மை
செல்வாக்கையும் பதவியையும் பொருட்படுத்தாமல் இருத்தல்
பதவியைப் பிறருக்கு உதவி செய்ய இயற்கை அளித்த நன்கொடையாக நினைத்தல்
தனித்திறன்களை வளர்த்தல்
பொறாமை இல்லாத பண்பை வளர்த்தல்
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்காமல் இருத்தல்
மூத்தோரை மதிக்கும் பண்பைப் பெற்றிருத்தல்
குடும்பப் பாரம்பரியத்தின் சிறப்பினைக் காத்து நிற்றல். அதோடு வழி வழியாகக் காக்கும் திறனை வளர்த்தல்
உதவி செய்தவரை என்றும் மறவாமல் இருத்தல்
உதவி செய்ததைச் சொல்லிக்காட்டாமல் இருத்தல்
மனதாரப் பாராட்டும் பண்பினை வளர்த்தல்
பேராசை இல்லாமல் இருத்தல்
நியாயமான ஆசையையே வளர்த்தல்
கடுஞ்சொல் பேசாமல் இருத்தல்
சினம் கொள்ளாமல் இருத்தல்
ஏட்டிக்குப் போட்டியாகப் பேசாமல் இருத்தல்
வாழ்க்கைப் பண்பாக நடிப்பைக் கொள்ளாமல் இருத்தல்
போலி கௌரவம் இல்லாமல் இருத்தல்
செல்வாக்கும் பணமும் இல்லாமல் இருக்கும்போது இருப்பதுபோல் நடித்தல்
அன்பு உணர்வைக் கொண்டிருத்தல்
தன்மீது நம்பிக்கை வைத்தல்
அறிவைத் தேடிப் பெறவேண்டும் மற்றவர் அறிவுச்சொத்தில் மாற்றம் செய்து தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது.
அறிவுச்சொத்தைப் பயன்படுத்தும்போது நன்றி தெரிவிக்கும் பண்பை வளர்த்துகொள்ளவேண்டும் (கவிஞர் கண்ணதாசனுக்குச் சொந்தமானது, மு.வ. புத்தகத்திலிருந்து எடுத்தது)
படைப்பாற்றல் சிந்தனையை வளர்த்தல்
முடிந்தவரை ஒத்துப் போகும் குணத்தைப் பெறுதல்
குடும்பம், சமூகம், நாடு போன்றவற்றில் அக்கறை செலுத்துதல்
ரகசியத்தைக் காப்பாற்றும் மனப்பான்மையை வளர்த்தல்
மன நிறைவுடன் வாழ முயற்சித்தல்
நேரத்தையும் பொருளையும் வீணாக்காமல் இருத்தல்
சிக்கனத்தைக் கடைப்பிடித்தல், கஞ்சத்தனத்தை வெறுத்தல்
உரிமை ஆசிரியர் சி. குருசாமி
பயிற்சி 16 / 2010
பிரித்தல் 3

சொற்கள்
பிரித்து எழுதுக

முக்கடல்


மரமொன்று


ஆட்பலம்


வடமேற்கு


தென்மலை


மேலைநாடு


பொற்றேர்


பற்பசை


தமிழார்வம்


உயிரோவியம்


குருதியோட்டம்


வடமேற்கு


வடமொழி


பற்பொடி


கற்றூண்


தற்காப்பு


பணப்பை


மல்லிகைப்பூ


கொடி மலர்


மரப்பட்டை

தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)
பயிற்சி 15 / 2010

பிரித்தல் 3
சொற்கள்
பிரித்து எழுதுக

அகத்தாய்வு


அகப்பாட்டு


அறஞ்செய்ய


மரவேர்


பாரவண்டி


உள்ளக்கோயில்


அகவாழ்வு


கற்கோயில்


கன்மலை


கட்குடம்


உட்பாகம்


பத்தாண்டு


முக்காலம்


அறுசுவை


முச்சாலை


முக்கனி


முச்சங்கம்


மும்மூர்த்தி


ஐம்பால்


முப்பால்


நூற்றாண்டு


இருகுரல்


பொற்கோயில்


பொற்சாலை




தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)
பயிற்சி 14 / 2010
வ. எண்
சொற்கள்
பொருள்
1
அறுசுவை

2
முச்சாலை

3
முக்கனி

4
முச்சங்கம்

5
புத்திரன்

6
ஐம்பால்

7
முப்பால்

8
கொடி மலர்

9
சிற்றாறு

10
ஒத்திகை

11
பயிற்றுநர்

12
நடத்துநர்

13
கடவுச்சீட்டு

14
மருந்தகம்

15
மருத்துவமனை

16
மறுமலர்ச்சி

17
மறுபதிப்பு

18
மாற்றுக்கருத்து

19
பெருஞ்சுவர்

20
குறிஞ்சி நிலம்

21
முல்லை நிலம்

22
மருதம் நிலம்

23
நெய்தல் நிலம்

24
பாலை நிலம்

தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)

Wednesday, April 7, 2010

சொல்லும் பொருளும்
பகுதி 1
பயிற்சி 11 / 2010
வ. எண்
சொற்கள்
பொருள்
1
அடைக்கலம்
2
உருவாக்கி
3
தெளிவற்ற
4
கல்விபுகட்ட
5
குறிப்பாக
6
கருதப்படுகிரறார் 7

முகப்பு அட்டை
8
மங்கிவருதல்
9
குன்றி
10
வழு
11
வழுக்கல்
12
மனப்போக்கு
13
வேட்கை
14
சிதைவு
15
சீர்திருத்தம்
16
தீவிரமாக
17
விற்றுவிடுதல்
18
விட்டுவிடுதல்
19
மட்டும்
20
மற்றும்
21
மாற்றுக்கருத்து
22
தோன்றிவிடவில்லை

ஆசிரியர். சி. குருசாமி (3)

சொல்லும் பொருளும்
பயிற்சி 12 / 2010

வ. எண்
சொற்கள்
பொருள்
1
அதிநவீன
2
உறைவிடம்
3
தீர்ப்பு
4
திருத்தப்பட்ட
5
தீர்மானித்தேன்
6
இதயம்
7
கடும்பயிற்சி
8
அம்சங்களை
9
பரிணமித்த்து
10
உன்னதக்கலை
11
நேர்காணல்
12
எண்ணியவர்
13
நல்வழிப்படுத்துதல்
14
திகழ்ந்தான்
15
உபசரித்து
16
அறுசுவை
17
முப்பழம்
18
முக்கனி
19
முக்கோணம்
20
களஞ்சியம்
21
பிரதிபலித்த்து
22
தலைதூக்கி


ஆசிரியர். சி. குருசாமி (1)

பயிற்சி 13 / 2010


வ. எண்
சொற்கள்
பொருள்
1
உயிரற்ற
2
அசம்பாவிதம்
3
ஊழியர்கள்
4
ஆயத்தம்
5
விளைவிக்கின்றன
6
வாடிக்கை
7
வீழ்ச்சி
8
முதலீடு
9
பிரதமர்
10
செவ்வனே
11
மெய்சிலிர்த்தது
12
பளிச்சிட்டது
13
பற்றியது
14
விழிப்படைந்தார்
15
முற்றும் துறந்தவர்
16
இரண்டற
17
இல்லறம்
18
கட்டுப்பாடு
19
சொக்கி
20
சொற்களஞ்சியம்
21
உள்ளுணர்வு
22
நாலடியார்
23
நாணம்
ஆசிரியர். சி. குருசாமி (1)

Sunday, March 28, 2010

பயிற்சி 01 / 2010.
அகராதியின் துணைகொண்டு அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருள் கண்டு பிடித்துச் சூழல் உருவாக்குக.


இனிப்புப் பொங்கல்

இயற்கையை வணங்கும் பொங்கல்
இல்லம் செழிக்கும் பொங்கல்
கவலை நீக்கும் பொங்கல்
கருத்துப் பெருகும் பொங்கல்!

உழைத்தவர் மகிழும் பொங்கல்
ஊருக்குக் காட்டும் பொங்கல்
உவகை ஊட்டும் பொங்கல்
உள்ளொளி வளர்க்கும் பொங்கல்
!

தமிழர் போற்றும் பொங்கல்
தமிழரைக் காட்டும் பொங்கல்
மங்காமல் பொங்கும் பொங்கல்
மனமெல்லாம் இனிக்கும் பொங்கல்!



பயிற்சி 02 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.


1. ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.


2. ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.

3. நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.

நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________


4. ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.


பயிற்சி 03 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக


செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்கள்


கந்தன் பத்தகம் படித்தான்.
புத்தகம் கந்தனால் படிக்கப்பட்டது

குமரன் கடையில் துணி வாங்கினான்.
கடையில் துணி குமரனால் ______________.


திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினார்.

திருக்குறள் திருவள்ளுவரால் ____________________.


இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

சிலப்பதிகாரம் என்ற புத்தகம் __________________________.


மதியழகன் சுவை மிகுந்த மதிய உணவு உண்ணுகிறான்.

சுவை மிகுந்த மதிய உணவு மதியழகனால் _______________________.


பாரி வள்ளல் துன்பப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்தான்.

துன்பப்படும் ஏழை மக்களுக்குப் பாரி வள்ளலால் ___________________________


பயிற்சி 04 / 2010.
2. அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லை எழுதுக.


ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (1) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(2) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (3) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (4) _________________ வந்தார்.


அதியமான் வேட்டையாடுவதில் (5) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (6) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (7) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (8) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (9) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.


ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (10) ___________________, அந்த நெல்லிக் கனியை ஔவையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.


பயிற்சி 05 / 2010.

அகராதியின் துணைகொண்டு சொற்களுக்குப் பொருளைக் கண்டுபிடித்து மாறுபட்ட இரண்டு சூழல் உருவாக்கி வரவும்.


குறுநில மன்னர்கள், போற்றி வந்தார், புலமை பெற்றவர் ,ஆச்சரியப்பட்டார், உண்ணக் கொடுத்தார்.

பயிற்சி 06 / 2010.
கீழ்கண்ட பகுதியில் குறில் நெடில் எழுத்துகள் அமைந்த சொற்களை அடையாளம் கண்டு அச்சொற்களை கோடிட்ட இடங்களில் நிரப்புக.

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மூத்தோரை (Q11) மதிக்கும் _____ குணம் ஆகும். இக்குணத்தை முதலில் நம்மிடம் வளர்ப்பவர்கள் நம் பெற்றோர் ஆவர். நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோர் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும்
(Q12) __________________ கற்றுக்கொடுக்கின்றனர். அதனைப் பின்பற்றிவரும் நாம் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். பின்னர், அவர்கள் கூறும் கதைகளையோ கருத்துகளையோ மிகவும் (Q13) __________________ கேட்கிறோம். இவற்றின் மூலம் நாம் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
ஒருசில குடும்பங்களில் பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பர். பிள்ளைகளில் மூத்தவர்கள் படித்தவர்களாக இருப்பர். இவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் (Q14) __________________ இளையவர்கள் சிறந்த பண்பினை வளர்த்துக்கொள்வர். மூத்தோர்களை மதிக்கும் இப்பழக்கம் நாம் வெளி உலகிற்கு வந்தவுடன் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை நாம் (Q15) __________________ தொடங்குவோம். அவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் கேட்கத்தொடங்குவோம். இவற்றின் வழி நம்முடைய கல்வி அறிவு பெருகும் வாய்ப்பு ஏற்படும். நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

___________________________ _______________________________
___________________________ ________________________________
___________________________ _________________________________
___________________________ _________________________________




பயிற்சி 07 / 2010.
கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மூத்தோரை (Q11) __________________ குணம் ஆகும். இக்குணத்தை முதலில் நம்மிடம் வளர்ப்பவர்கள் நம் பெற்றோர் ஆவர். நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோர் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் (Q12) __________________ கற்றுக்கொடுக்கின்றனர். அதனைப் பின்பற்றிவரும் நாம் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். பின்னர், அவர்கள் கூறும் கதைகளையோ கருத்துகளையோ மிகவும் (Q13) __________________ கேட்கிறோம். இவற்றின் மூலம் நாம் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம்.

ஒருசில குடும்பங்களில் பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பர். பிள்ளைகளில் மூத்தவர்கள் படித்தவர்களாக இருப்பர். இவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் (Q14) __________________ இளையவர்கள் சிறந்த பண்பினை வளர்த்துக்கொள்வர். மூத்தோர்களை மதிக்கும் இப்பழக்கம் நாம் வெளி உலகிற்கு வந்தவுடன் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை நாம் (Q15) __________________ தொடங்குவோம். அவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் கேட்கத்தொடங்குவோம். இவற்றின் வழி நம்முடைய கல்வி அறிவு பெருகும் வாய்ப்பு ஏற்படும். நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.


பயிற்சி 08 / 2010.
கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவற்றுள் ஒரு சில மிகவும் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. ______________________ உணவு, உடை, இருப்பிடம் முதலியன ஆகும். இம்மூன்றும் இல்லாமல் மனிதனால் ________________________ வாழமுடியாது. ________________________ உணவு மிகவும் முக்கியத் தேவையாக அமைகிறது. உணவு இல்லாவிட்டால் உயிரினங்களால் நிச்சயமாக உயிர் வாழமுடியாது.

உணவுமுறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சைவ உணவு, மற்றொன்று அசைவ உணவு. செடி கொடி, மரங்களிலிருந்து ________________________ம் உணவைச் சைவ உணவு என்கிறோம். இவ்வகை உணவு உடலுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கிறது. இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. இது உடலைச் சீராக வைத்துக்கொள்ள _________________. சைவ உணவை இயற்கை உணவு என்று கூறுகிறோம்.

பயிற்சி 09 / 2010.

கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

இந்த உலகில் பல இனமக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு இனமும் வெவ்வேறு வாழ்க்கை _________________________ அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. மக்களின் பழக்க வழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு பண்பாட்டுக் கூறுகள் _____________________. தமிழர் பண்பாடும் பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

நமது பண்பாட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்பண்பாடு ____________________ புறப்பண்பாடு. அகப்பண்பாட்டில் குடும்ப வாழ்க்கையையும் கொடைத் தன்மையையும் _______________________. புறப்பண்பாடு என்பது வெளி உலகில் மனிதன் பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களை _____________________. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம்முன்னோர்கள் பின்பற்றிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் நம்மால் பின்பற்ற முடியவில்லை. ஆனால், சில முக்கியக் கூறுகளை நாம் அவசியம் பின்பற்றித்தான் நடக்கவேண்டும்.


பயிற்சி 10 / 2010.

பின்வரும் சொற்களை அவற்றின் பொருள் விளங்கும் வகையில் வாக்கியங்களில் அமைத்து எழுதுக.


Q1. ஆராய்ந்து
______________________________________________________________________________________________________

Q2. கதிகலங்கி
________________________________________________________________________________________________________

Q3. விருந்துண்ண
________________________________________________________________________________________________________

Q4. வேலைப்பாடு
________________________________________________________________________________________________________

Q5. நிரூபிக்க

______________________________________________________________________________________________________________________________________________


பயிற்சி 10 / 2010.

கீழ்க்கண்ட சொற்களை அகராதியைப் பயன்படுத்திப் பொருள் எழுதுக. அவற்றுள் உனக்குப் பிடித்த இரண்டு சொற்களைக் குறிப்பிட்டு அவை ஏன் பிடித்தன என்று சிறு குறிப்பு எழுதி அவற்றிற்கு வாக்கியங்கள் அமைக்கவும்.


கையேடு, எண்ணப்பதிவுகள், இயக்குநர், அனுப்புநர், பெறுநர், மதிப்பிற்குரிய, இல்லாமை, கொல்லாமை, உண்ணாமை,