Wednesday, July 17, 2013

சிலப்பதி காரம் - குறிப்பு

இலக்கியம்2

தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி


சிலப்பதிகாரம் அறிமுகம்

சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இது தமிழில் உள்ள காப்பியங்களுள் (தொடர்நிலைச் செய்யுள்) மிகவும் பழமையானது. ஒருகாலத்தில் புலவர்கள் மன்னர்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும்தாம் இலக்கியங்களைப் படைத்தனர். அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம். அதனால், இதனைக் குடி மக்கள் காப்பியம் என்றும் நாடகக் காப்பியம் என்றும் அழைப்பர்.


சங்ககாலத்தில் தமிழ்நாடு மூன்று பெரும்பிரிவுகளாக இருந்தது. அம்மூன்று பிரிவையும் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்று அழைத்தனர். இதனை முப்பெரும் மன்னர்கள் ஆண்டு வந்தனர். இம்முப்பெரும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பையும் மக்களின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.

ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்கை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காப்பியத்தைத் தொடங்குகிறார். இது மூன்று காண்டங்களை உடையது. இக்காண்டங்களை முப்பது உட்பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.  காப்பியத்தின் தொடக்கம் புகார்க்காண்டம் ஆகும். புகார்க்காண்டம் சோழமன்னன் சிறப்புகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் பண்பு நலன்களையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டாவது காண்டம் மதுரைக் காண்டம் இது பாண்டிய மன்னனின் வாழ்க்கை முறையையும் அவனின் அவசரக்குணத்தையும் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக் கூறுகிறது. மூன்றாவது காண்டம் வஞ்சிக் காண்டம் ஆகும். இக்காண்டத்தில் இன்று கேரளா என்று அழைக்கப்படும் சேர மன்னனின் குண இயல்புகளையும் அவனின் வீரச் சிறப்புகளையும் விளக்கிக் கூறுகிறது.  




  சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதுவதற்கு முன்பு பெரிய இலக்கியம் தோன்றியதாகத் தெரியவில்லை. இதனைக் காப்பியம் என்று கூறுவர். காப்பியம் என்பது தொடர்நிலைச் செய்யுள் ஆகும். அதாவது செய்யுள் வடிவத்தில் நீண்ட கதை அமைப்பை உடையதாகும். இது பெண்கள் அணியக்கூடிய ஒரு வகை ஆபரணத்தை மையமாகக் கொண்ட காப்பியம் ஆகும். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இவ்வணிகலம் காலில் அணியக்கூடியது. கதையை இயக்கிச் செல்லும் முக்கியக் கருவியாகச் சிலம்பு விளங்குகிறது.

சிலப்பதிகாரத்தில் கதைத்தலைவனும் கதைத்தலைவியும் சிறந்த வாழ்க்கை வாழ்கின்றனர். மேலும், இதில் துணைப் பாத்திரங்கள், கிளைக் கதைகள், இயற்கை வர்ணனை நாடு நகர் போன்ற பிரிவுகள் உள்ளன. இவற்றின் விளக்கங்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின்  நோக்கம் சிறப்பாக இருக்கிறது.  இக்காப்பியம் மூன்று அடிப்படை நோக்கங்களைக் கொண்டது.

நோக்கங்கள்

அரசாட்சி செய்பவர்கள் தவறு எதுவும் செய்யக்கூடாது. ஒரு வேளை தவறு செய்துவிட்டால் நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும்

ஊழ்வினை (ஒரு பிறப்பில் செய்த தவற்றுக்குரிய தண்டனையை மற்றொரு பிறப்பில் அடைதல்) நம்மை வந்து அடையும்

கணவனுக்குக் கட்டுப்பட்டுச் சிறந்த கற்பு நெறியுடன் வாழும் பெண்களை உலகம் போற்றும்




திருக்குறள் நட்பு விளக்கம்

இலக்கியம்2
தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி

நட்பு ஆராய்தல்

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார். நட்பைப் பற்றிப் பத்துப்பாடல்களில் விளக்கிய திருவள்ளுவர் அதனைத் தொடர்ந்து எப்படிப்பட்ட நட்பு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பதையும் எப்படி நட்பினை ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் `நட்பு ஆராய்தல்` என்னும் பகுதியில் விளக்கியுள்ளார்.  இதன் பொருளை நன்கு உணர்ந்து வாழ்க்கையில் செயல்படும்போது நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றுவிடலாம் என்பது திண்ணம்.

ஒருவருடன் நன்கு ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் திடீரென்று ஆராய்ந்து பார்க்காமல் ஒருவருடன் நட்புக்கொண்டால் அது மிகப்பெரிய துன்பத்தைத் தரும். ஏனென்றால் ஒருவருடன் நட்புக்கொண்டபின் அவரை விட்டுவிலகுவது மிகவும் கடினம்.


ஒருவர் உலகவழக்கு இல்லாத தீயசெயல்களைச் செய்யும்போது அவருடன் தொடர்புடைய நண்பர் அவரைக் கண்டிப்பவராகவும் உலக வழக்கின்படி செல்லுவதற்கு அறிவுறுத்துபவராவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை ஆராய்ந்து பார்த்து அவர்களோடு நட்புக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்குத் துன்பம் வரும்போது அத்துன்பத்திலிருந்து நல்ல அறிவினையும் பெற்றுக்கொள்ளலாம். அவருக்கு வருகின்ற துன்பம் (கேடு).அவருடைய நண்பர்களை மிகவும் சிறப்பாக அளவிட உதவும் அளவுகோலாகப் பயன்படும்.

அறிவில்லாதவர்களுடைய நட்பிலிருந்து விலகி நிற்பதே ஒருவருடைய சிறந்த செல்வம் (நன்மை, ஊதியம், பேறு) ஆகும்.

நமக்குத் துன்பத்தைத் தரும் தீய எண்ணங்களை நாம் எப்போதும் நினைக்கக் கூடாது. மேலும், நமக்குத் துன்பம் வரும்போது உதவிசெய்யாமல் நம்மிடமிருந்து விலகிச் செல்பவர்களுடன் நமது உறவுமுறையைத் தொடரக்கூடாது.


Tuesday, May 21, 2013


கவிதை இலக்கியம்

கருப்பொருள்   :  உலகமும் உயிரினமும்
சிறப்புக்கரு     : உறவும் பண்பும்

வளர்த்த நரி

அடர்ந்த பெருங் காட்டிலே 
அசைந்து திரியும் விலங்குகள்
கூட்டங் கூட்டமாகச் செல்லும்
கூடியவை உயிர் வாழுமே!

காட்டில் ஒரு குட்டிநரி
காணாமல் அது போனது
போன வழி மறந்தது
புலம்பி அது தவித்தது!

சிங்கம் ஒன்று பார்த்தது
சினத்தை அது மறந்தது
பாசம் காட்டி நின்றது
பால் கொடுத்து மகிழ்ந்தது!

கொஞ்ச காலம் சென்றது
கொஞ்சும் காலம் மறைந்தது
நரிக்குட்டி அங்கிருந்து பிரிந்தது
நாடிதன் இனத்தோடு இணைந்தது!

காலம் விரைந்து சென்றது
கால் வீரம் இழந்தது
படுத்துச் சிங்கம் இருந்தது
பார்த்து நரிக்கூட்டம் வந்தது!

வஞ்சகமாய் வளர்த்தநரி நின்றது
வாழ்வை முடிக்க நினைத்தது
சீறிப்பாய்ந்து சிங்கத்தைக் கொன்றது
சில்லறைபோல் உடல்சிதறி மறைந்தது!







புரிந்துணர்வைச் சோதிக்க எழுத்துத் திறப் பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள கவிதையைப் படித்த பின்னர் அடியில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களுள் ஒன்றினைத் தேர்வு செய்து விடை எழுதுக.


1 `வளர்த்த நரி' என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதையின் கருத்துகளைத்
தொகுத்து எழுதுக.

2 `வளர்த்த நரி' என்னும் தலைப்பு இக்கவிதைக்குப் பொருந்துமா? காரணத்தை
   விளக்குக.

3 `வளர்த்த நரி' என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதையின் மூலம் ஆசிரியர் 
  கூறவிரும்பும் கருத்துகளை எழுதுக.

_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

தொடர்நடவடிக்கை

இணையப்பக்கம் சென்று குடும்பம், சமூகம், நாடு, உலகம், அறிவு போன்றவற்றைப் பற்றிய கவிதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் புரிந்துகொள்க. அதன்பின்னர், கலந்துரையாடுக.  

வீட்டுப்பாடம்

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளில் ஒன்றைப் பற்றிப் புதிய கவிதை ஒன்றை எழுதித் தட்டச்சு செய்து அடுத்த வகுப்பில் பகிர்ந்துகொள்க.

கவிதையோடுதொடர்புடைய தொடர்கள் சில. (கூடுதல் பயிற்சி 1)

1 வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது

2 பாம்புக்குப் பால் வார்த்த மாதிரி

3 பாத்திரம் அறிந்து பிச்சை போடு

4 பெத்த மனம் பித்து
   பிள்ளை மனம் கல்

5 வெளுத்ததெல்லாம் பால் அல்ல

6 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

7 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
   தன் பிள்ளை தானே வளரும்

8 பாசம் கண்ணை மறைக்கும்

9 எச்சரிக்கை என்றும் காக்கும்


கவிதையைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளில் உன்னை மிகவும் கவர்ந்த கருத்து மூன்றை எழுதுக.ஏன்? (கூடுதல் பயிற்சி 2)

* சீக்கிரம் புரிந்துகொள்ளமுடிந்தது
* எளிய வார்த்தைகளால் ஆனது
* வாழ்க்கையோடு தொடர்புடையது
* விருப்பத்தோடு படிக்க முடிந்தது
* உண்மையான  வாழ்க்கைக் கதை
* இசை வடிவத்திலும் பாடலாம்
* கருத்து மிகவும் சோகமாக இருந்தது  
* மனிதர்களிடமிருக்கும் மிருகக் குணம்
* உள்ளம் உருகும் ஒரு சோகக்கதை
* நல்ல பாடமாக அமைந்துள்ளது
* உலகில் உள்ள ஒருசிலரைப்பற்றிய கவிதை
* மக்களின்உள்ளத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்
* வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
* வாழ்க்கைக்குத் தேவையான செய்திகளைக் கற்றுக்கொள்ளலாம்

* பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்

கவிதையோடுதொடர்புடைய கீழ்க்கண்டகருத்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைக் கவிதையின் கருத்துகளின் மூலம் விளக்குக. (கூடுதல் பயிற்சி 3)

நரிக்கொம்பு விற்றாலும் விப்போமிங்க நாங்கள்
நரி போன்ற வஞ்சனைகள் செய்ய மாட்டோம் .. திரைப்படப்பாடல்

வலது கை கொடுப்பதை இடதுகை அறியாமல் ... கர்ணன் கதை

ஒரு நரி ஓசையிட ஓசை செல்லும் கடலுக்கு

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு  .. குறள்

நன்றி மறவேல் - ஔவையார்

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமந்திரம்

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே மணிமேகலை
ஒருவருடன்நட்புக்கொள்வதற்கு முன்பு அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்

வீட்டுப்பாடம்
அன்பு, அறிவு, நட்பு, புரிந்துகொள், ஏமாறாதே, ஏமாற்றாதே, ஆகியவற்றில் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கவிதை ஒன்று எழுதி அதைத் தட்டச்சு செய்யவும்.


நன்றியுடன்
ஆசிரியர் சி. குருசாமி





















கவிதை இலக்கியம்

 

கருப்பொருள்   :  உலகமும் உயிரினமும்

சிறப்புக்கரு     : உறவும் பண்பும்

 

வளர்த்த நரி

 

அடர்ந்த பெருங் காட்டிலே 

அசைந்து திரியும் விலங்குகள்

கூட்டங் கூட்டமாகச் செல்லும்

கூடியவை உயிர் வாழுமே!

 

காட்டில் ஒரு குட்டிநரி

காணாமல் அது போனது

போன வழி மறந்தது

புலம்பி அது தவித்தது!

 

சிங்கம் ஒன்று பார்த்தது

சினத்தை அது மறந்தது

பாசம் காட்டி நின்றது

பால் கொடுத்து மகிழ்ந்தது!

 

கொஞ்ச காலம் சென்றது

கொஞ்சும் காலம் மறைந்தது

நரிக்குட்டி அங்கிருந்து பிரிந்தது

நாடிதன் இனத்தோடு இணைந்தது!

 

காலம் விரைந்து சென்றது

கால் வீரம் இழந்தது

படுத்துச் சிங்கம் இருந்தது

பார்த்து நரிக்கூட்டம் வந்தது!

 

வஞ்சகமாய் வளர்த்தநரி நின்றது

வாழ்வை முடிக்க நினைத்தது

சீறிப்பாய்ந்து சிங்கத்தைக் கொன்றது

சில்லறைபோல் உடல்சிதறி மறைந்தது!


 

 

 

 

 

 

 

 

 

 

புரிந்துணர்வைச் சோதிக்க எழுத்துத் திறப் பயிற்சி

 

கொடுக்கப்பட்டுள்ள கவிதையைப் படித்த பின்னர் அடியில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களுள் ஒன்றினைத் தேர்வு செய்து விடை எழுதுக.

 

 

1. `வளர்த்த நரி' என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதையின் கருத்துகளைத்

தொகுத்து எழுதுக.

 

2.`வளர்த்த நரி' என்னும் தலைப்பு இக்கவிதைக்குப் பொருந்துமா? காரணத்தை

   விளக்குக.

 

3.`வளர்த்த நரி' என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதையின் மூலம் ஆசிரியர் 

   கூறவிரும்பும் கருத்துகளை எழுதுக.

 

_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

 

கவிதையோடுதொடர்புடைய தொடர்கள் சில. (கூடுதல் பயிற்சி 1)

 

1 வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது

 

2 பாம்புக்குப் பால் வார்த்த மாதிரி

 

3 பாத்திரம் அறிந்து பிச்சை போடு

 

4 பெத்த மனம் பித்து

   பிள்ளை மனம் கல்

 

5 வெளுத்ததெல்லாம் பால் அல்ல

 

6 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

 

7 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

   தன் பிள்ளை தானே வளரும்

 

8 பாசம் கண்ணை மறைக்கும்

 

9 எச்சரிக்கை என்றும் காக்கும்

 

 

கவிதையைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளில் உன்னை மிகவும் கவர்ந்த கருத்து மூன்றை எழுதுக.ஏன்? (கூடுதல் பயிற்சி 2)

 

* சீக்கிரம் புரிந்துகொள்ளமுடிந்தது

* எளிய வார்த்தைகளால் ஆனது

* வாழ்க்கையோடு தொடர்புடையது

* விருப்பத்தோடு படிக்க முடிந்தது

* உண்மையான  வாழ்க்கைக் கதை

* இசை வடிவத்திலும் பாடலாம்

* கருத்து மிகவும் சோகமாக இருந்தது  

* மனிதர்களிடமிருக்கும் மிருகக் குணம்

* உள்ளம் உருகும் ஒரு சோகக்கதை

* நல்ல பாடமாக அமைந்துள்ளது

* உலகில் உள்ள ஒருசிலரைப்பற்றிய கவிதை

* மக்களின்உள்ளத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்

* வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்

* வாழ்க்கைக்குத் தேவையான செய்திகளைக் கற்றுக்கொள்ளலாம்

 

* பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்

 

கவிதையோடுதொடர்புடைய கீழ்க்கண்டகருத்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைக் கவிதையின் கருத்துகளின் மூலம் விளக்குக. (கூடுதல் பயிற்சி 3)

 

நரிக்கொம்பு விற்றாலும் விப்போமிங்க நாங்கள்

நரி போன்ற வஞ்சனைகள் செய்ய மாட்டோம் .. திரைப்படப்பாடல்

 

வலது கை கொடுப்பதை இடதுகை அறியாமல் ... கர்ணன் கதை

 

ஒரு நரி ஓசையிட ஓசை செல்லும் கடலுக்கு

 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு  .. குறள்

 

நன்றி மறவேல் - ஔவையார்

 

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமந்திரம்

 

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே மணிமேகலை

ஒருவருடன்நட்புக்கொள்வதற்கு முன்பு அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்

 

வீட்டுப்பாடம்

அன்பு, அறிவு, நட்பு, புரிந்துகொள், ஏமாறாதே, ஏமாற்றாதே, ஆகியவற்றில் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கவிதை ஒன்று எழுதி அதைத் தட்டச்சு செய்யவும்.

 

 

நன்றியுடன்

ஆசிரியர் சி. குருசாமி